Politics
இடைத்தேர்தல்; சிபிஐ & சிபிஎம் நிலைப்பாடு என்ன? – மாநிலச் செயலாளர்கள் பிரத்யேக பதில்

இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் அறிவிக்கும்.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தவெக அரசுக்குத் தற்போது வரை வெளியிலிருந்துதான் ஆதரவு அளித்து வருவதாக கூறினார்.
வீரபாண்டியன் அளித்த பிரத்யேக பேட்டியில், “இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை குறித்து விரைவில் அறிவிப்போம். தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடர்கிறது. இன்றுள்ள சூழலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என கட்சி முடிவெடுத்துள்ளது. வரும் காலங்களில் முடிவை கட்சி கூடி முடிவெடுக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.
இதே போல், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து விவரித்தார். தொடர்ந்து நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி அளித்த சண்முகம் தெரிவித்ததாவது; “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஎம் நிலைப்பாடு என்பதற்காக நாளை கட்சியின் மாநிலச் செயற்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு அக்கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
