Lifestyle and human interest
ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை
கோவை: ரேஷன் அட்டை தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு குறைதீர் முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை முகாமில் பெற்றுக்கொள்ளலாம். பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறலாம்.