Lifestyle and human interest
காஞ்சியில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம், செப்., 19ல் நடைபெற உள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம், நாளை, ஐந்து தாலுகாக்களிலும், தலா ஒரு கிராமத்தில், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் தாலுகாவில் தாமல் கிராமம், உத்திரமேரூர் தாலுகாவில் திருப்புலிவனம் கிராமம், வாலாஜாபாத் தாலுகாவில் தோனாங்குளம் கிராமம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பிச்சிவாக்கம் கிராமம், குன்றத்துார் தாலுகாவில் நடுவீரப்பட்டு கிராமம் என, ஐந்து கிராமங்களில், நாளை, ரேஷன் கார்டு குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், பொது மக்கள் பங்கேற்று, ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீககுதல், முகவரி மாற்றம், நகல் அட்டைக்கு விண்ணப்பம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர், நரிக்குறவர்கள் ரேஷன் அட்டை கிடைக்காமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.