Politics
மாஜி வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வேலு, 2,455 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, த.வெ.க., வேட்பாளர் அருள் ஆறுமுகம், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ''தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை,'' எனக்கூறி, த.வெ.க., வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.