Politics
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில், அமைச்சர் செங்கோட்டையன் பெற்ற வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சட்டசபை தேர்தலில், கோபிசெட்டி பாளையம் தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், 16,620 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் நல்லசிவத்தை தோற்கடித்தார். மூன்றாம் இடம் பிடித்த அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு, செங்கோட்டையனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.