Politics
நெல் மூட்டைகளை 5 நாளில் கொள்முதல் செய்திட வேண்டும்: தமிழக அரசுக்கு பா.ஜ., மாநில செயலாளர் வலியுறுத்தல்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மாளிகைமேட்டில் இயங்கி வரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை கடந்த 15 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று நெல் கொள்முதல் பணி துவங்கியது.
இந்நிலையில் மாளிகைமேடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று வருகை தந்த பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், கொள்முதல் நிலைய ஊழியரிடம் தாமதத்திற்கான காரணத்தை கேட்டறிந்தார்
மாளிகைமேடு சுற்று வட்டார விவசாயிகள், கொண்டு வந்த நெல்லை 15 நாட்களுக்கு பிறகு கொள்முதல் செய்கின்றனர். 5 நாட்களில் கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை இல்லை. விவசாயிகள் பல இன்னல்களை தாங்கி விளைவித்து நெல், அவர்கள் கண் முன் வீணாவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அரசு முறையாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பராமரித்து அரிசியாக மாற்றததே, ரேஷன் அரிசி தரமில்லாததற்கு காரணம். விவசாயிகள் தரமான நெல்லை தான் கொடுக்கின்றனர். அதனை உடனடியாக கொள்முதல் செய்தால் அரிசி நன்றாக இருக்கும். குறிப்பிட்ட ஈரப்பதமாக இருக்கும் போது அரிசியை தரமாக்கிட வேண்டும்.
விவசாயிகள் கோவனம் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே இருக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. நெல்லை 5 நாளில் கொள்முதல் செய்யவும், நெல் மூட்டைகளை பாதுகாக்க ெஷட் அமைத்திட வேண்டும் என தமிழக பா.ஜ., சார்பில் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன்.
