காலை உணவுத்திட்ட சாம்பாரில் சாணி பவுடரை கலக்க சொன்னவர் கைது
சத்தியமங்கலம்:காலை உணவுத்திட்ட சாம்பாரில் சாணி பவுடரை கலக்க சொன்ன விபரீத ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த ராமபையலுாரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.
பள்ளியில், 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
தேதி காலை உணவு திட்டத்தில் சமைத்த சாம்பாரில், மஞ்சள் பொடி அதிகமாக
உள்ளதாக, பள்ளி மேலாண்மை குழுவினர், தலைமை ஆசிரியரிடம்
தெரிவித்துள்ளனர். மறுநாள் சமையலர் பொன்னம்மாவிடம் இதுபற்றி கேட்ட
போது, அளவாகத்தான் மஞ்சள் பொடி போட்டதாக கூறினார்.
விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், 52; மாணவி ஒருவரை மிரட்டி
சாணிப்பவுடரை ஆசிரியர் சாம்பிள் பார்க்கும் சாம்பாரில் கலக்க
சொல்லியுள்ளார். இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியை குமுதா, சத்தி போலீசில்
நேற்று முன்தினம் புகாரளித்தார். போலீசார் விசாரித்த நிலையில்,
சாணிப்பவுடரை கலக்க செய்த ஆறுமுகத்தை கைது செய்தனர். ஆறுமுகத்தின்
மனைவி ஆலம்மாள், காலை உணவு திட்டத்தில் சமையலராக வேலை செய்து
வந்துள்ளார். சரியாக சமையல் செய்யாததால் அவரை பணியில் இருந்து
நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமித்துள்ளனர்.
சாணிப்பவுடரை கலக்க சொன்னதாக தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக
குழந்தைகள் சாப்பிடும் சாம்பாரில் கலந்திருந்தால் விபரீதம்
நடந்திருக்கும் என்று, ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
