கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்: தேசிய கல்வி உதவித்தொகைக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக 9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் 10, பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் உள்ள பள்ளிகளில் படிப்பவராக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் புதுப்பித்தல் படிவத்தை பூர்த்தி செய்து செப்.,30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்.,15 க்குள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்க வேண்டும்.புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு http://scholarships.gov.in என்ற இணையதளத்திலும், 04567 –231050 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.–––