Politics
"பெரியார் - அண்ணா பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பதா?" - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு, குடியாத்தத்தில் திமுக கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறி கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
