Politics
பெரியார், அண்ணா பேரணிக்கு அனுமதி மறுப்பு! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி!

பெரியார், அண்ணா பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழக முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பெரியார் மற்றும் அண்ணா பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
”தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல் துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல் துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்வர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Opposition Leader Udhayanidhi has questioned Chief Minister C. Joseph Vijay regarding the denial of permission for the Periyar and Anna rallies.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.