Politics
சிக்கிய முக்கிய ஆவணங்கள்; அன்பில் மகேஸுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் நேற்று (16-09-26) காலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதே போல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், டிஸ்குகள், காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வரும் நிலையில், நாளை (18-09-26) அன்பில் மகேஸ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மற்ற நபர்களுக்கும் சம்மன் கொடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)