ஆத்துார் நகராட்சியில் 420 நாய்களுக்கு தடுப்பூசி
ஆத்துார்: தெரு நாய்கள் மூலம் ரேபிஸ் நோய் பரவாமல் இருக்க, ஆத்துார் நகராட்சி பகுதிகளில், சனிதோறும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணியில், நகராட்சி சுகாதார பிரிவு மற்றும் கால்நடைத்-துறை மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார பிரிவு அலுவலர் பழனி சாமி கூறியதாவது:ஆத்துார் நகராட்சியில், 486 தெரு நாய்கள், 110 வளர்ப்பு நாய்கள் உள்ளன. சனிதோறும் வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, 420 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாய் பிறந்த, 4 மாதங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும். பின் ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.