Science and technology
”சீனாவை வெல்வதே முக்கியம்; ஏஐ அபாயங்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை” - ட்ரம்ப்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த மனித இனத்திற்கே அது ஆபத்தாக முடிந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக, ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் வருங்காலத்தில் ஏஐ குறித்து கடும் எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”செயற்கை நுண்ணறிவு பற்றிய இத்தகைய எச்சரிக்கைகள் யாவும் எதிர்மறை சக்திகளால் பரப்பப்படுகின்றன. ஏ.ஐ. துறையில் யாா் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கே உலகமும் சொந்தம். தற்போது ஏ.ஐ. துறையில் அமெரிக்கா சீனாவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த நிலையையே நான் தொடர விரும்புகிறேன்” என்றார்.
உலகளாவிய ஏ.ஐ. போட்டியில் அமெரிக்காவின் முன்னிலையைச் சீனாவிடம் இழக்கத் தாம் விரும்பவில்லை. இப்போட்டியில் வெற்றி பெறுவதே அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களைக் கையாள உதவும். அதனால், ஏஐ குறித்த அபாயங்களை பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)