Science and technology
"AI-யின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலகம் அச்சம் கொள்வதில் தவறில்லை" - சாம் ஆல்ட்மேன் கருத்து

AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலகம் அச்சம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என ஓபன்-ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தை உருவாக்கும் சில நிறுவனங்கள் அதிகளவு அதிகாரத்தைப் பெற்று, பொருளாதாரத்தில் தேவையற்ற ஆதிக்கத்தைச் செலுத்தவும், மக்களின் மீது தங்களின் உலகப் பார்வையைத் திணிக்கவும் கூடும் என்ற உண்மையான பயம் மக்களிடையே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தின் வேகத்தை விட, அதன் பாதுகாப்பு, சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் எப்போதும் ஒரு படி முன்னதாகவே இருக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.