Politics
செங்கல் சூளையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
உத்திரமேரூர்:செங்கல் சூளையில், மின்மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து, மங்கள்சிங் எங்க்டி, 43. நேற்று உயிரிழந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மங்கள்சிங் எங்க்டி, 43. காவித்தண்டலம் கிராமத்தில், உள்ள எம்.எம்.ஆர்., செங்கல் சூளையில், நான்கு மாதங்களாக வேலை பார்த்து வந்ததாகவும், இந்நிலையில், நேற்று மண் பதப்படுத்துவதற்காக தண்ணீர் எடுக்கும் மின் மோட்டாரை இயக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மங்கள்சிங் எங்க்டி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கினார். அருகில், இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், மங்கள்சிங் எங்க்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.