மகளை கிண்டல் செய்த நபருக்கு ஸ்கெட்ச்.. நண்பர்களை ஏவி தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது?

மதுரை திருமங்கலத்தில் கூலித்தொழிலாளியை துடிதுடிக்க கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர். மகளை கிண்டல் செய்ததால் நண்பர்களை வைத்து பழிதீர்த்த சம்பவத்தில் நடந்தது என்ன?.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சிவல் சருகு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி முருகன். 38 வயதான இவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், கணவனை காணவில்லை என சங்கிலி முருகனின் மனைவி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முருகன் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அவர் பேசிய பாக்கியசெல்வம் என்பவரை, சந்தேகத்தின்பேரில் காவல்நிலையம் அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து, போலீசாரை சுற்றலில் விட்டுள்ளார். செல்போன் ஆதாரம் இருந்தும் வேர்த்து வெட வெடக்க போலீசாரிடம் பதிலளித்துக்கொண்டிருந்த பாக்கியசெல்வம் ஒருகட்டத்தில், “சார்.! நாங்க தான் அவனை கொன்றோம். இப்ப என்ன?.” என கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போதுதான் காணாமல் போன முருகன், கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்கிய செல்வத்தின் மகளை கொலை செய்யப்பட்ட சங்கிலி முருகன் கிண்டல் செய்தது தொல்லை கொடுத்தது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Apple AirTag மூலம் கண்காணிப்பு.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் ஷாக்!
இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் போக்கு நீடித்து வந்தது. சமீபத்தில் மீண்டும் இருவரும் மோதிக்கொள்ள குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசிய சங்கிலி முருகனை, கொலை செய்ய வேண்டும் என பாக்கியசெல்வம் சபதம் எடுத்துள்ளார். இதற்காக தனது கூட்டாளியான மருதுபாண்டி உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து சங்கிலி முருகனை காரில் கடத்தி உள்ளார். முன்பகையை சொல்லி கை, கால்களைக் கட்டிப் போட்டு காருக்குள் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களாக உடலில் கீறல் போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
இக்கொடூர தாக்குதலில் சங்கிலி முருகன் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சடலத்தை திருமங்கலம் அருகே உள்ள பாலடைந்த கட்டடத்தின் தரை நீர்தேக்க தொட்டிக்குள் வீசி விட்டு தப்பித்துள்ளனர். ஆனால் செல்போன் பதிவால் போலீசில் இருந்து தப்பிக்க முடியாமல் வசமாக சிக்கி உள்ளனர். இதனையடுத்து சங்கிலி முருகனின் சடலத்தை மீட்ட போலீசார் கொலையாளிகளான பாக்கியசெல்வம், மருதுபாண்டி உள்ளிட்ட மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு கொலையாளியைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
