கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் டிகிரி படிக்கும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.www.bcw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பிக்க அக். 31க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை நவ. 30க்குள்ளும் அனுப்ப வேண்டும், என்றார்.