Arts, culture, entertainment and media
விவசாயிகளுக்கு பயிற்சி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை துறை சார்பில் இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அய்யூர் அகரத்தில் நடந்த பயிற்சிக்கு உதவி வேளாண்மை இயக்குனர் கங்கா கவுரி தலைமை தாங்கி விவசாயிகளிடம் தமிழக அரசு விக்கிரவாண்டி வட்டாரத்தில் 20 எக்டர் பரப்பளவில் இயற்கை வேளாண்மை செய்யும் 27 விவசாயிகளுக்கு, 3 ஆண்டுகளுக்கு இயற்கை இடுபொருள் மற்றும் பின்னேற்பு மானியம், தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.
சான்றளிப்புத்துறை ஆய்வாளர் லாவண்யா, வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் திவ்யபாரதி, சூர்யா மற்றும் முன்னாடி விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.