Crime, law and justice
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தேதி மாற்றம்
திருப்பூர், செப். 10– திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செப். 15-ம் தேதி நடைபெற இருந்த ‘தாய்மாமன் தங்க
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செப். 15-ம் தேதி நடைபெற இருந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட துவக்க விழா மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பில் இருந்து முதல்வர் பங்கேற்பு மற்றும் திட்ட துவக்க தேதி குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 2,045 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதல்வர் திட்டத்தை சென்னையிலோ அல்லது வேறு மாவட்டத்திலோ துவக்கி வைக்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அரசு அறிவுறுத்தும் புதிய தேதியில் திருப்பூரில் விழா நடைபெறும்; செப். 15-ம் தேதி விழா நடக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.