Crime, law and justice
தங்க மோதிரங்கள் வைக்க 4 இடங்களில் சேப்டி லாக்கர்: இதுவரை 1,600 குழந்தைகள் தேர்வு

கோவை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 15 ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர். பிரத்யேகமாக விண்ணப்பிக்க தேவையில்லை. கர்ப்பிணிகளிடம் ஆதார், ஸ்மார்ட் கார்டு, இருப்பிட சான்றிதழ் பெறப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகும் போதே, மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தங்க மோதிரங்களை பத்திரமாக வைக்க அரசு மருத்துவமனைகளில், சேப்டி லாக்கர் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை வேகமாக செய்கிறது. கோவையில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில், இந்த லாக்கர் அமைகிறது.
இந்த திட்டத்துக்கு தனியாக நோடல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இவர் தலைமையில், ஆரம்ப சுகாதார நிலையம், பிற அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அளித்தல், இருப்பு பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகள் நடக்கும்.
தற்போது வரை, 1,628 குழந்தைகள் தங்க மோதிரம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.