சேதமடந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
திருக்கழுக்குன்றம், செப். 7– தத்தலுார் ஊராட்சியில் சேதமடைந்த தார்சாலையை, சீரமைக்க வேண்டும் என வாகன
தத்தலுார் ஊராட்சியில் சேதமடைந்த தார்சாலையை, சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் அருகே தத்தலுார் ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை பாடசாலை தெரு, குறுமுகை, கொல்லமேடு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலை முழுதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி சீரழிந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நகர பகுதிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.