Economy, business and finance
நக்கீரன் தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷுக்கு ஜாமீன்!

கடந்த ஜனவரி மாதம் தனியார் யூடியூப் சேனலில் நக்கீரன் தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷ் பேசியது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சவுக்கு மீடியா சார்பாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தாமோதரன் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதனிடையே, தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷை ஆலந்தூர் நீதிமன்றத்தில் அழைத்து வந்து போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்த வாதிட்ட வழக்கறிஞர் சரவணன், தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சொந்த ஜாமீனில் தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷை விடுவிப்பதாக உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் 15 நாட்கள் அவர் நேரடியாக ஆஜராக கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)