Politics
இடைத் தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம்; மதுராந்தகத்தில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விதிமீறல்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
