Arts, culture, entertainment and media
“மிகப்பெரிய ஆசீர்வாதம்” - ரஜினி பாராட்டால் சூரி நெகிழ்ச்சி!

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குக்கிடையிலான படகுப்போட்டியை முக்கிய கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் படத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வர திரையரங்குகளில் கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வசூலிலும் ரூ.50 கோடியை நெருங்கி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இப்படத்திற்கு ரஜினி பாராட்டியுள்ளார் அவர் தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளதாக சூரி தனது எக்ஸ் பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்த் சார் நம்ம மண்டாடி படத்தை பார்த்து ரசித்தார். அவரது இதயப்பூர்வமான அழைப்பு எனக்கும் எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் உலகம் போன்றது. அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினி பேசிய போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏@rajinikanth sir 🙏🙏🙏
அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த… pic.twitter.com/RYNPUzFqUj
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)