Lifestyle and human interest
கன்று குட்டியை கொன்ற சிறுத்தை சென்னம்பட்டி அருகே மக்கள் பீதி
அந்தியூர்; அந்தியூரை அடுத்த சென்னம்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் அர்த்தனாரி, 65; ஓய்வு பெற்ற ஆசிரியர். தோட்டத்தில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசு, 20 நாட்களுக்கு முன் கன்று ஈன்றது.
வீட்டின் பின்புற கொட்டகையில் பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மாடு கத்தும் சத்தம் கேட்டது. அர்த்தனாரி கொட்ட-கைக்கு சென்று பார்த்தபோது, ஒரு சிறுத்தை கன்-றுக்குட்டியை கடித்து இழுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின்படி சென்னம்-பட்டி வனத்துறையினர் நேற்று காலை சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.சிறுத்தையின் கால் தடத்தை வைத்து புதர் பகுதியில் தேடியபோது, கழுத்துப்பகுதி கடித்து குதறி கொல்லப்பட்ட நிலையில் கன்று இறந்து கிடந்தது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவ-டிக்கை இல்லை. கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று, அப்பகுதி விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.