சாலை நடுவே ஏற்படும் பள்ளம் வாகன ஓட்டிகள் விபத்து அபாயம்
சித்தாமூர், செப். 10– ஓணம்பாக்கம் – அரியனுார் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன
ஓணம்பாக்கம் – அரியனுார் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் இருந்து அரியனுார் வழியாக விழுதமங்கலம் செல்லும் 10 கி.மீ., துாரம் தார் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக நாகமலை, நெசப்பாக்கம், வெண்மணி, கல்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு
தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் இயங்குகின்றன. இதனால், அவ்வழியே தினமும் 100க்கும் மே ற்பட்ட கல்குவாரி லாரிகள் இயங்குவதால், சாலை முழுதும் சேதமடை ந்து சீரழிந்து வருகிறது. மேலும், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். இதனால் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களும் பழுதடைகின்றன.
எனவே, சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.