Politics
“மாணவன் தமிழ்ச்செல்வன் உறவினர்கள் மீது காவல்துறை அடக்குமுறை…” - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி, மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தார்.
திமுக எம்.பி. கனிமொழி, “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
