Arts, culture, entertainment and media
இம்மார்டல் படம் எப்படி இருக்கும்? ஜி.வி. பிரகாஷ் பேட்டி
இம்மார்டல் படம் குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்த கருத்து.....
தனது படமான இம்மார்டல் படம் குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
தான் நாயகனாக நடித்து தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இம்மார்டல் திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள திரையரங்கில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பலமுறை முதல் கட்சிகள் சென்னையில் மட்டுமே கொண்டாடி வந்தோம். ஆனால் இந்த முறை தஞ்சாவூரில் ரசிகர்களுடன் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. படம் அதிகளவில் புக்கிங் ஆகி வருகிறது. இதனால் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.
தமிழ் சினிமாவுக்கு புதிதான படம், வித்தியாசமான படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். இம்மார்டல் திரைப்படம் ரொமான்டிக்காகவும் திரில்லிங்காகவும் இருக்கும். அஜித்குமார் போன் பண்ணி டாக்யூ படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளீர்கள் என்று நன்றியுடன் பாராட்டினார்.
எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. நடிகர் அஜித்குமார் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து கேள்விக்கு அது நல்ல விஷயம், விளையாட்டுத் துறையை மாநிலத்தில் ஊக்குவிப்பது உடல் ஆரோக்கியமானது. அது நல்ல விஷயம் இரண்டு பேருமே உயர்ந்திருக்கக் கூடிய ஸ்டார்ஸ்.
அவர்கள் பேசி இருப்பது மிக சந்தோசம். அடுத்து புதுப்படம் குறித்து கூறுகையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் நடிக்க உள்ள படங்களைத் தெரிவித்தார்.
Actor and music composer G.V. Prakash has shared his thoughts on his newly released film, Immortal.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.