Politics
எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி தள்ளுபடி செய்தார்.
திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக் கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டுக்கு திமுக தலைவர் கண்டனம்
இதுவரை தவெக எம்எல்ஏ இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
