சீமை கருவேல மரங்கள் அகற்றம்
நத்தம், செப்.9- நத்தம் பேரூராட்சி சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் மெய்யம்பட்டியில்
நத்தம் பேரூராட்சி சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் மெய்யம்பட்டியில் ஊரணி கரையோரம் இருந்த மரங்கள் செயல் அலுவலர் விஜயநாத் மேற்பார்வையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
சாணார்பட்டியில் இருந்து வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் இருந்த சீமை கருவேல மரங்கள் நத்தம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலசெந்தில்நாதன், உதவி பொறியாளர் யோகவேல் ஆகியோர் மேற்பார்வையில் அகற்றப்பட்டன.