Arts, culture, entertainment and media
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ரிஷிவந்தியம்: ரங்கப்பனுாரில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
வாணாபுரம் தாசில்தார் நளினி செய்திக்குறிப்பு:
வாணாபுரம் தாலுகா, ரங்கப்பனுாரில் இன்று காலை 10:00 மணியளவில் கலெக்டர் பத்மஜா தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
முகாமில், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதுடன், பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் முகாமில் பங்கேற்று தங்களது கோரிக்கை மற்றும் புகார் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.