Politics
தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு
தவெக தலைமையிலான கூட்டணியின் பெயரை செப். 9-ல் அறிவிக்கவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியது குறித்து...
தவெக தலைமையிலான கூட்டணியின் பெயரை செப். 9-ல் அறிவிக்கவிருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, தவெக ஆட்சியமைக்க முதலில் காங்கிரஸ் கட்சிதான் ஆதரித்தது. தொடர்ந்து, ஐயூஎம்எல் மற்றும் விசிகவும் ஆதரித்தனர். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் வெளியிருந்து ஆதரவு தருவதாக அறிவித்தனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணியை முறைப்படுத்துவதற்காக ஜூலை முதல் வாரத்தில் சந்திப்பு நடத்தப்பட்டது.
இப்போது, கூட்டணி குறித்து முறைப்படுத்த சந்திப்பு நடத்தப்படுகிறது. செப். 9 ஆம் தேதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தக் கூட்டணியின் பெயரிடப்படவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயரிடப்பட்ட பிறகு, கூட்டணிக் கட்சிகளால் இறுதிசெய்யப்பட்ட பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
TVK-led alliance announcement on September 9
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.