பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்
பழநி:பழநியில் நடந்த ஏலத்தில் முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ.160.90க்கு விற்றது.
பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் புதன்கிழமைதோறும் ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் பழநி, வெள்ளகோயில், காங்கேயம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.
9.500 டன் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டதில் முதல் தர தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.160.90க்கும் குறைந்தபட்சமாக ரூ.142க்கும் ஏலம் போனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.