Crime, law and justice
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்: நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பாருங்கள்; அமைச்சர் ரமேஷ் உறுதி

மதுரை: ''திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை, மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பு பாருங்கள்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி: கோவில்களில் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களுக்கு, நீதிமன்ற அனுமதியுடன் யானைகளை நன்கொடையாளர்கள் விரும்பி கொடுக்கின்றனர். யானைகள், சிறப்பாக கண்காணிக்கப்பட்டு, பாகன்களால் வளர்க்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம், பிரச்னை இல்லை; அது கொண்டாட்டம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த பின்பு பாருங்கள்.இடைத்தேர்தல்களில் த.வெ.க., நிச்சயம் வெற்றி பெறும்.
நாங்கள் ஜெயிப்போமா, 'டிபாசிட்' வாங்குவோமா என்றெல்லாம் பேசினர். ஆனால், வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம். எங்கள் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடந்த போதே, 'ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை' என, தைரியமாக சொன்னவர் முதல்வர் விஜய். அவருக்கு எல்லா மதமும், எல்லா மக்களும் ஒன்று தான்.
இவ்வாறு கூறினார்.