Politics
“இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் விஜய் வருவார்...” - அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி!

தந்தை பெரியார் 148வது பிறந்த நாளையொட்டி ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் உள்ள சிலைக்கு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட கலெக்டர் ச. கந்தசாமி,மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் மோகன், சண்முகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர் விஜய் பாலாஜி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழும் தந்தை பெரியார் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அடிமை சாசனத்தில் இருந்து அனைவரும் சமம் என்கிற பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கை கொண்ட தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் அன்று புகழஞ்சலி செலுத்துவதில் மகிழ்ச்சி. முதல்வர் வெளிநாடு சென்று 15,000 கோடி முதலீடு பெற்றிருப்பது ஆக்கப்பூர்வமாகவும் மக்களுக்குப் பயனுள்ள வகையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அஜித் அரசியலுக்கு வந்தால் விஜயின் அரசியல் வாழ்க்கை அஸ்தம்பனமாகிவிடும் என்ற திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அதிமுக அஸ்தமனம் ஆகிவிட்டது என்ற வருத்தத்தில் தெரிவித்துள்ளார்" எனப் பதிலளித்தார். பொங்கல் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி பணி தாமதமாகவில்லை அனைத்து இடங்களிலும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தைக் காட்டிலும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் உடுத்தும் வகையில் வேட்டி சேலை நிச்சயம் வழங்கப்படும். கூலி உயர்வு கோரிக்கையை ஏற்று ஐவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வறிக்கையை இந்த வாரக் கடைசியில் கொடுக்கவுள்ளனர். அதன் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் நிச்சயம் வருவார். மீண்டும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கே தவெகவில் சீட் வழங்கியிருப்பதை கம்யூனிஸ்ட் சண்முகம் விமர்சித்தது குறித்த கேள்விக்கு விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் பணியாற்றவும், திமுக - அதிமுக மறைமுக கூட்டணி பிடிக்காமல் வெளியே வந்ததாத அவர்கள் (ராஜிநாமா செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்) தெரிவித்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார் .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

