Health
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, கே.ஈச்சம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட சின்ன ஈச்சம்பாடியில்,
மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, கே.ஈச்சம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட
சின்ன ஈச்சம்பாடியில், ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில்,
நடமாடும் மருத்துவக்குழுவின் மூலமாக, சின்னஈச்சம்பாடியில்
மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பஞ்., செயலர்
மூலம், கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டது.
மேலும், வீட்டை சுற்றியிருந்த பானை, டீ கப், தேங்காய் ஓடுகள், உடைந்த
பாட்டில், டயர் போன்ற தேவையற்ற பொருட்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள்
மற்றும் துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கு
குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கவும், அதேபோல், குடிநீரை
கொதிக்க வைத்து குடிக்க வேண்டும், குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்
பள்ளிக்கு அனுப்பாமல் தனிமைப்படுத்தி, காய்ச்சல் சரியான பின்,
பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என, சுகாதாரத்துறையினர்
அறிவுறுத்தினர்.
முகாமில், ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் நிலவேம்பு குடிநீர், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.