தமிழக சுற்றுலா விருதுகள்-2026 விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்
நாமக்கல்:தமிழக சுற்றுலா விருதுகள்-2026' பெற, சுற்றுலா தொழில் வணிகத்தினரிடம் இருந்து, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமூக -பொருளாதார வளர்ச்சியில், சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலா பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை, 'சுற்றுலா' விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்தாவது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருதுகள், சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழி வகுக்கும்.
களான, தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தலம் உள்பட, 13 வகைகளில் விருது வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணையவழி மூலமாக சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, வரும் செப்., 30. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், நாமக்கல், 04286 - 280870 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

