Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா
ராமநாதபுரம்: - ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம்
ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடந்தது.
யாதவ சங்க தலைவர் ஆழி அருள்தாசன் வரவேற்றார். வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து உரியடி, மஞ்சள் நீராட்டு விழா, கண்ணபிரான் வீதி உலா, தேரோட்டம் நடந்தது. யாதவ சங்க இளைஞரணி தலைவர் குகன் நன்றி தெரிவித்தார்.