Education
தற்காலிக செவிலியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
திருவள்ளூர், செப். 17– திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான
திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில், தேசிய நலக்குழுமத்தின் கீழ் உள்ள மாவட்ட நலச்சங்கம் வாயிலாக, 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக செவிலியர் பணி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, இந்த தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்ப படிவத்தை, https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன், வரும் 25ம் தேதிக்குள் செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், திருவள்ளுர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.