Education
தற்காலிக செவிலியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு:ஈரோடு மாவட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்,
மாவட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர்
பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக செவிலியர்
பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணிகளுக்கு, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.செவிலியர்
பட்டய படிப்பு, பி.எஸ்.சி., நர்சிங், அரசு, அரசு அங்கீகரிக்கப்பட்ட
தனியார் செவிலியர் கல்லுாரி, இந்திய செவிலியர் குழுமத்தில்
அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கவுன்சில் பதிவு பெற்றோர் இதற்கு
தகுதியானோர். விபரங்களை, nhm.tn.gov.in மற்றும் https://erode.nic.in
மூலம் பதிவிறக்கம் செய்து வரும், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள்,
'நிர்வாக செயலர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம்,
திண்டல், ஈரோடு-12' க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.