Education
செவிலியர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 4,724 வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! - முழு விவரம் இதோ!

Nurse | தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒப்பந்தம் மற்றும் தற்காலிக செவிலியர் பணிக்கு மொத்தம் 4,724 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் பட்டயப் படிப்பான GNM அல்லது இளங்கலை செவிலியர் படிப்பான B.Sc Nursing முடித்திருக்க வேண்டும் என்றும் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் செவிலியர் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
