Politics
தேக்கடி அரசு துவக்கப் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு
கூடலுார்:தேக்கடியில் உள்ள தமிழக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேக்கடி தமிழக பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகை அருகே கம்பம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. 2026-- - 28 க்கான பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை லாவண்யா வரவேற்றார்.
தலைவராக சத்தியா, துணைத் தலைவராக பாண்டீஸ்வரி, சமூக ஆர்வலர் அன்புராஜா, உறுப்பினர்களாக கல்வியாளர் அப்பாஸ் ஹாஜீரா பேகம், குமுளி 13வது வார்டு கவுன்சிலர் ஷாஜி பொன்னன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் கூரை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருப்பதால் மழைக்காலங்களில் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணியின் போது அணையில் பணியாற்றிய தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளி என்ற பெருமை இதற்கு உண்டு.