Politics
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கலுக்கு 2 நாள் அவகாசம்
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 9ம் தேதி தொடங்கி
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலகமான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
முதல் நாளில், மேட்டூரைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்றுமுன்தினம் வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாவது நாளான நேற்று, பல்லடம் தாலுகா மாணிக்காபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை, சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், மூன்று நாட்கள் வேட்புமனு தாக்கல் நடைபெறாது.
வரும் 15, 16ம் தேதிகள் என இரண்டு நாட்கள் மட்டுமே மனு தாக்கலுக்கு கால அவகாசம் உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இவ்விரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.