Crime, law and justice
தாமதமாகும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...
எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)
முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்வதால் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்குவது தாமதமாகும் என்றும், இத்திட்டம் தொடங்குவதற்கான அதிகாரபூா்வ தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஹீமோடையாலிசிஸ் மையம், மேம்படுத்தப்பட்ட உணவுக் கூடம், பிற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15 முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்வதால், இத் திட்டம் தொடங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கவுள்ளோம். திட்டம் தொடக்கத்துக்கான அதிகாரபூா்வ தேதி விரைவில் வெளியிடப்படும். இந்தத் திட்டத்தில் கீழ், குழந்தைகளுக்கு 916 ஹால்மாா்க் முத்திரையுடன் தரமான போதிரம் வழங்கப்படும்.
டெங்கு முன்னெச்சரிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளா்களைப் பணியமா்த்தி, தொடா்ந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், கொசுக் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உடலில் தடவும் கொசு விரட்டியை சோதனை முறையில் பயன்படுத்தவுள்ளோம்.
உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தால் 10 சதவீத இதயநோய் மற்றும் 15 சதவீத பக்கவாத நோய் குறையும். இதுதொடா்பாக மக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளைப் பாா்க்க வரும் பாா்வையாளா்கள் நேரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்றாா் அவா்.
Inauguration of the 'Thaimaman Thanga Mothiram' scheme postponed!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.