Crime, law and justice
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.,17ல் துவங்க முடிவு செப்.,17ல் துவங்க முடிவு
விருதுநகர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்.,17ல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ஜூன் 22ல் அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணை வெளியான நாள் முதல் தங்க மோதிரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதற்கான பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணிகள் செப்.,10க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.,15ல் துவங்க திட்டமிடப்பட்ட நிலையில் செப்.,10ல் முதல்வர் விஜய் லண்டன் செல்ல உள்ளதால் செப்.,17ல் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் துவக்கப்படவுள்ளது. அன்றைய தினமே தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.