Politics
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்
செங்கல்பட்டு, செப். 9– மதுராந்தகம் தனி தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத்தேர்லில், வாக்காளர்களுக்கு

மதுராந்தகம் தனி தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத்தேர்லில், வாக்காளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை கண்காணிக்கும் பணியில், கண்காணிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் தனி தொகுதிக்கு அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை யொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தலைமையில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலெ க்டர் வீரப்பன் பேசியதாவது:
மதுராந்தகம் தொகுதியில் உள்ள உள்ள 285 ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் 167 ஓட்டுச்சாவடி அமைவிடங்களிலும், விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.
தேர்தல் தொடர்பான புகார்களை, 044 – 27427412, 1800–425–7088, 1950 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெ ரிவிக்கலாம். புகார் தொடர்பாக, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணியில் ஒன்பது பறக்கும்படை, ஒன்பது கண்காணிப்பு குழு மற்றும் இரண்டு வீடியோ கண்காணிப்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்க, 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவ
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு அஞ்சல் ஓட்டுக்கள் செலுத்த ஏற்படு செய்யப்பட்டடுள்ளது.
மேலும், 72 மணி நேரத்திற்குள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரமும் அகற்றப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யவும், ஒலிபெருக்கி பயன்படுத்துவது, ஊர்வலம், தற்காலிக கட்சி அலுவலகம், மற்றும் இதர அனுமதிகளுக்கு ‘சுவிதா செயலி’ மூலம் விண்ணப்பித்து, முன் அனுதி பெற வேண்டும்.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது மொபைல் எண்: 94450 00415, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராஜேஷ் மொபைல் எண்: 8056835165,
மதுராந்தகம் தாசில்தார் பெருமாள் மொபைல் எண்: 94450 00503, தனி வட்டாட்சியர் வீரமணி 9597671072,
ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.