Politics
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுப்பு த்தேவன் வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா வரவேற்று கூட்டத்தின் முக்கியத்துவம்பற்றி விளக்கினார். தலைவராக மதுமிதா, துணைத் தலைவராக ஆனந்தி, பெற்றோர் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் வாணி பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி உட்பட பலர்பங்கேற்றனர். பள்ளிஇடைநிலை ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்