Religion
130 விநாயகர் சிலைகள் கடப்பாக்கம் கடலில் கரைப்பு
செய்யூர், செப். 17– செய்யூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில்

செய்யூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 130 விநாயகர் சிலைகள், கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டன.
இந்தியா முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி செ ய்யூர் ஊராட்சிக்கு உட்பட்டகோவில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பாக பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வழிபாடு முடிந்ததை அடுத்து மூன்றாம் நாளான நேற்று மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாகக் எடுத்து வரப்பட்டன.
செய்யூர் பகுதியில் காவல்துறை அனுமதித்துள்ள கடப்பாக்கம், கடலுார்குப்பம், தழுதாளிகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில் போலீஸ் பாதுகாப்புடன் 130 சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. நாளை மற்றும் ஏழாம் நாளான 20ம் தேதி மீதம் உள்ள விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட உள்ளன.
விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யும்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.