குருவிமலை கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை திருட்டு
காஞ்சிபுரம், செப். 18-– காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 23 சவரன் தங்க நகைகளை,
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 23 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில், மளிகை கடை நடத்தி வருபவர், பூங்கொடி, 36. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மகள் மற்றும் தம்பியின் இரண்டு மகள்களுடன், வளத்தோட்டம் செல்லும் சாலையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டி வசித்து வருகிறார்.
இந்நிலையில், மகள் மற்றும் தம்பியின் பிள்ளைகளை பள்ளியில் விட்டு, நேற்று, காலை 9:00 மணியளவில் மளிகை கடையை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
அதன்பின், இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்ததை பூங்கொடி பார்த்துள்ளார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து, பூங்கொடி அளித்த புகாரின்படி, மாகறல் போலீசார் வழக்கு பதிந்து, வீடு புகுந்து நகைகளை திருடி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.