இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 41; கட்டட தொழிலாளி.
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம்
பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 41; கட்டட தொழிலாளி. இவரது,
இரண்டு மகள்களில் மூத்தமகள் திருமணமாகி, கணவருடன் வசித்து
வருகிறார்.
இரண்டாவது மகள் தமிழ்செல்வி, 17, பத்தாம் வகுப்பு வரை
படித்துவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம்
இரவு, 1:00 மணியளவில் கழிவறைக்கு செல்ல வெளியில் வந்தார். அதன்பின்
வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பெண்ணின் தந்தை கிருஷ்ணமூர்த்தி
அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் காணாமல் போன இளம்பெண்ணை
தேடி வருகின்றனர்.